பட்டாசு ஆலையில் பெரும் வெடி விபத்து... 5 பேர் உடல் சிதறி பலி!

 
பட்டாசு ஆலை

விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி பகுதியில்  பட்டாசு ஆலையில் பெரும் வெடிவிபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கோர  வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக தெரிகிறது.  

ஆம்புலன்ஸ்

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் சரிந்து தரைமட்டமான நிலையில் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமான நிலையில் இடிபாடுகளில் யாரும் சிக்கியுள்ளனரா என தேடும் பணிகள்  தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

தீவிபத்து

இதில் 5 பேரின் உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்த சிலர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கியுள்ளார்களா என மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. வருவாய்த் துறையினர், காவல்துறையினருக்கும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web