பிப்ரவரியில் 4 நாட்கள் விடுமுறை... இப்பவே பயணத்த திட்டமிட்டுக்கோங்க!

இன்று பொங்கல் தொடர் விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்கிய நிலையில், மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அடுத்த விடுமுறை எப்போது என்பதை யோசிக்க தொடங்கி விட்டனர். ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விடுமுறை ஞாயிற்றுக்கிழமையில் வருவதால் ஏமாற்றமே. அதே நேரத்தில் பிப்ரவரி மாதம் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பள்ளி மாணவர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை விடுமுறை என்றாலே கொண்டாட்டமும், குஷியும் தான்.
அதிலும் கொத்தாக விடுமுறை என்றால் கேட்கவே வேண்டாம். பொதுவாக டிசம்பர் மாதம் மற்றும் ஜனவரி மாதம் மாணவர்களுக்கு கொண்டாட்டமாகவே கழியும். டிசம்பர் மாதத்தில் அரையாண்டு விடுமுறை. ஜனவரியில் பொங்கல் விடுமுறை என களைகட்டும். அதிலும் நடப்பாண்டில் எந்த வருடமும் இல்லாத வகையில்பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்தது. இந்த விடுமுறை பள்ளி மாணவர்களுக்கும் மட்டுமில்லாமல் அரசு ஊழியர்களுக்கும் கொண்டாட்டமும், குஷியும் தான். இந்நிலையில் பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அடுத்த எப்போது தொடர் விடுமுறை வருகிறது என இப்போதே காலண்டரை பார்க்க தொடங்கி விட்டனர்.
அடுத்ததாக அவர்களுக்கு பிப்ரவரி 11ம் தேதி தைப்பூசம் செவ்வாய்க்கிழமை விடுமுறை. அதற்கு முன்னதாக சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் எனவே திங்கட்கிழமை மட்டும் ஒரு நாட்கள் விடுப்பு எடுத்தால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிப்ரவரி மாதமும் மாணவர்களுக்கு குஷியான மாதமாக மாறியுள்ளது. எனவே இந்த தொடர் விடுமுறையை பயன்படுத்தி வெளியூர் செல்பவர்கள் தற்போதே பயண திட்டத்தை திட்டமிட்டு கொள்ளலாம்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!