நெகிழ்ச்சி... சலூன் கடைகாரருக்கு மொபைல் வாங்க நிதி திரட்டிய வாடிக்கையாளர்!

 
சலூன்
 

 காசியாபுரம்  பகுதியில் சோனு என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் முடி திருத்தும் கடை வைத்துள்ளார். இவர் அன்றும் வழக்கம் போல் கடையில் முடி திருத்திக் கொண்டிருக்கும்போது அவருடைய மொபைல் போன் திருடு போய்விட்டது.  இதனால் அவர் மிகவும் வருத்தத்துடன் இருந்தார்.  திடீரென ஒரு நாள் அவருக்கு நத்திங் இந்தியா நிறுவனத்திடமிருந்து ஒரு புது மொபைல் போன் பரிசாக வந்தது.


இது குறித்த விசாரணையில்  அவருடைய வாடிக்கையாளர்களில் ஒருவரான ரோகித் சலுஜா அவருக்கு புதிய போன் ஒன்றை வாங்கி கொடுப்பதற்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.  அதற்காக அவர் புது தில்லியில் உள்ள கனாட் ப்ளேஸ்  பகுதியில் நிதி திரட்டும் வகையில் QR குறியீட்டைக் கொண்ட டி-ஷர்ட் அணிந்து கொண்டு நின்றார்.
அப்போது அவரைக் கண்ட பூஜா சன்வால் புகைப்படம் எடுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.  இந்தப் பதிவு சமூக வலைதளத்தில்  வேகமாக வைரலாகி வருகிறது. இதற்காக  ஜூலை 16ம் தேதி ரூ.1600 நிதி உதவி கிடைத்தது. மேலும் கிரவுட் ஃபண்டிங் milaap ல் ரோகித் சலுஜா, சோனு இனிமையான குணமுடையவர்.  இந்த மொபைலை பரிசாக அளிப்பதன் மூலம் அவர் “மீண்டும் புன்னகைக்க” என  பதிவிட்டுள்ளார்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web