அடேங்கப்பா... அஞ்சு கிலோ நகைகளை அணிந்து திருப்பதிக்கு வந்த பக்தர்!
ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று திருப்பதி திருமலையில் ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இலவச தரிசனம் வாயிலாக ஏழுமலையானை தரிசிக்க 14 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்தனர்.
புத்தாண்டை முன்னிட்டு நேற்று அதிகாலை 2 மணிக்கு திருப்பாவை சேவையும், அதனைத் தொடர்ந்து அர்ச்சனை, தோமாலை சேவை என ஆர்ஜித சேவைகள் நடைபெற்றன.
இந்நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த தெலங்கானா ஒலிம்பிக் சங்க துணைச் செயலாளர் விஜய குமார் 5 கிலோ எடையில் தங்க நகைகளை அணிந்து ஏழுமலையானை தரிசித்தார். ஏழுமலையானை தரிசிக்க காத்திருந்த பக்தர்கள் 5 கிலோ எடையில் முழுக்க நகைகளை அணிந்தபடி வந்த விஜயகுமாரை ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!