வீதிக்கு வந்த குடும்ப விவகாரம்.. தங்கையின் மீது பரபரப்பு புகார் அளித்த ஆந்திர முன்னாள் முதல்வர்!
ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஆந்திர முதல் அமைச்சராக இருந்தார். ஆனால் ஹெலிகாப்டர் விபத்தில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி 2019ல் முதல் அமைச்சரானார்.ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவராக இருந்து வருகிறார். ராஜசேகர ரெட்டியின் மகள் ஷர்மிளா தெலுங்கானாவில் ஒய்எஸ்ஆர் என்ற தனிக்கட்சியை நடத்தி வந்தார். இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அவர் தனது கட்சியை காங்கிரசுடன் இணைத்துள்ளார்.

தற்போது ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக அரசியல் செய்து வருகிறார். இந்நிலையில் ஜெகன் மோகன் தனது தங்கை மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ‘‘சரஸ்வதி பவர் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் நானும், எனது மனைவியும் பங்குகளை பிற்காலத்தில் எனது தங்கைக்கு செட்டில் செய்வதாக 2019ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டேன்.
இந்த ஒப்பந்தம் முற்றிலும் அன்பு மற்றும் பாசத்தால் செய்யப்பட்டது. ஆனால் இப்போது அதை ரத்து செய்ய வேண்டும் என்று கடிதம் மூலம் ஷர்மிளாவிடம் தெரிவித்துள்ளேன். ஆனால் எங்களுக்குச் சொந்தமான பங்குகள் வாரியத் தீர்மானத்தின் மூலம் சட்ட விரோதமாக ஷர்மிளாவின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், எங்கள் குடும்பத்துக்குச் சொந்தமான கிளாசிக் ரியாலிட்டி நிறுவனத்தின் பங்குகளும் என் அம்மாவுக்கு மாற்றப்பட்டுள்ளன.

அவர் எனது அரசியல் எதிரியாக செயல்பட்டு பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். இவரது செயல்பாடுகள் அண்ணன் தங்கை உறவை சீர்குலைத்துள்ளது. எனக்கு அவர் மீது இனி எந்தப் பாசமும் இல்லை, நான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூறியது போல் ஷர்மிளாவின் பெயரில் பங்குகளை மாற்ற விரும்பவில்லை. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். இந்த வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வருகிறது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
