5,000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் மரணம்... அதிர்ச்சியில் திரையுலகம்!

தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகர் விஜய் ரங்கராஜூ என்கிற ராஜ்குமார் படப்பிடிப்பில் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்களும், தெலுங்கு திரைப்பட ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வில்லன் நடிகர், சண்டைப் பயிற்சியாளர், குணசித்திர கதாபாத்திரங்கள் என்று 5,000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சமீபத்தில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்துக் கொண்ட போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார்.
அதன் பின்னர் சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று காலமானார். அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
1994ல் வெளியான பைரவ தீவு திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். அதிக வில்லன் வேடங்களில் நடித்துள்ள ராஜ்குமார், அனைத்து மொழிகளிலும் சேர்த்து 5,000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
புனேயில் பிறந்த இவர் மும்பையில் தனது இளமைக் காலத்தை கழித்துள்ளார். தான் நேர்மையான காவல்துறை அதிகாரியாக விரும்பியதாகவும், யோசிக்காமல் சினிமாவில் நுழைந்ததாகவும் பல முறை குறிப்பிட்டுள்ளார். சென்னையில் மேடைக் கலைஞராகப் பல நாடகங்களில் நடித்து வந்த அவர், பின்னர் திரையுலகில் நுழைந்தார்.
பாபு இயக்கிய 'சீதா கல்யாணம்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ‘சீதா கல்யாணம்’ அவரது முதல் படமாக இருந்தாலும், ‘பைரவ தீவு’ படம் தான் அவருக்கு அங்கீகாரம் பெற்றுக் கொடுத்தது. அதன் பின்னர் அவர் ‘பைரவ தீவு விஜய்’ என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!