வீடு புகுந்து திருடிய வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட பிரபல ரவுடி!
சென்னை திருமங்கலம் பகுதியில் வீடு புகுந்து திருடிய வழக்கில் பிரபல கொள்ளையன் ஒருவர் உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.திருமங்கலம் பகுதியை சேர்ந்த பாலமுகுந்தன் (57) தனது வீட்டின் பூட்டை உடைத்து 16 ஆயிரம் ரூபாய், வெள்ளி டம்ளர், 2 செல்போன்கள், மற்றும் உண்டியலில் இருந்த சில்லறை காசுகள் கொள்ளையடிக்கப்பட்டதாக திருமங்கலம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் முத்து தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது மூவரின் அடையாளத்தை கண்டறிந்தனர். இதையடுத்து, பாடி டிவிஎஸ் காலனியைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் ஆகாஷ் (20) மற்றும் அவருடன் இருந்த இரு சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து திருடப்பட்ட பொருட்கள் — 16 ஆயிரம் ரூபாய், வெள்ளி டம்ளர், 2 செல்போன்கள், சென்ட் பாட்டில்கள், மற்றும் பட்டாக்கத்தி — ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.பின்னர் ஆகாஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார், மேலும் கைது செய்யப்பட்ட இரு சிறுவர்கள் சென்னை கெல்லீஸில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
