வைரல் வீடியோ... ஓரம் போ... ஓரம் போ... சைகை காண்பிக்கும் யானை!
சமூக வலைதளங்களில் வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் குறுக்கே நின்ற ஒரு நபரை யானை ஒதுங்கி செல்லும்படி யானை சைகை காண்பிக்கிறது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் யானை செல்லும் வழியில் ஒரு நபர் நின்று கொண்டிருக்கிறார்.
Elephant gently reminding the human that he is in the way. pic.twitter.com/Ft6P7ICUf8
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) December 14, 2024
அவருக்கு பின்னால் இருந்து வந்த யானை அவரை ஒதுங்கி செல்லும்படி சைகை செய்கிறது.உடனே யானையைப் பார்த்து அந்த நபர் பயத்துடன் அங்கிருந்து ஓடி வருகிறார்.
அதன் பிறகு அந்த யானையும் அங்கிருந்து நகர்ந்து செல்கிறது. அந்த வீடியோ 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. வந்தவரை யானை தாக்காமல் சைகை காண்பித்த செய்கைக்கு நெட்டிசன்கள் பாராட்டுக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!