முறிந்து விழுந்த ராட்சத மரம்.. சாலையோரம் சென்ற கீரை வியாபாரி சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நெமிலி, பாண்டூர் கிராமத்தை சேர்ந்த குள்ளன் என்பவரின் மகன் விநாயகம் (வயது 60) . இவர் இன்று அதிகாலை 05.45 மணிக்கு கீரை வியாபாரம் செய்வதற்காக, விருத்தாச்சலம் சந்தைக்கு வந்து, கீரைகளை கொடுத்து விட்டு மீண்டும் ஊருக்கு செல்வதற்காக, இருசக்கர வாகனத்தின் மூலம் உளுந்தூர்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது விருத்தாச்சலம் -உளுந்தூர்பேட்டைக்கும் இடையே உள்ள, பூவனூர் கிராமத்தின் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ரோட்டின் ஓரத்தில் இருந்த, சுமார் 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் தானாக ரோட்டின் குறுக்காக முறிந்து விழுந்துள்ளது. அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த, விநாயகத்தின் மீது, மரம் விழுந்ததில் அவர் மரத்தின் அடியில் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் மங்கலம்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில், விரைந்து வந்த காவல்துறையினர், ஜேசிபி இயந்திரம் மற்றும் தீயணைப்புத் துறையின் உதவியுடன், மரத்தின் அடியில் சிக்கிக் கொண்டிருந்த விநாயகத்தின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மங்கலம்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கீரை வியாபாரம் செய்யும் வியாபாரி சாலையில் சென்ற நிலையில், ராட்சத மரம் விழுந்து உயரிழந்த சம்பவம், அதிகாலையிலேயே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!