பெரும் அவலம்.. போக்குவரத்து வசதி குறைபாடு.. தாய், சேயை தூக்கிக்கொண்டு ஆற்றில் ஆபத்தான பயணம்!

 
ஆந்திரா தாய், சேய்

ஆற்றில் ஆபத்தான பயணத்தைத் தொடர்ந்து பச்சிளம் குழந்தையை தூக்கிக்கொண்டு தாய் மருத்துவமனைக்குச் செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள சுந்தரி கொண்டா கிராமத்திற்கு முறையான போக்குவரத்து வசதி இல்லை. இக்கிராமத்திற்கு செல்ல பயன்படும் மண் சாலை வழியாக ஆறு ஓடினால், மழை பெய்து வெள்ளம் வந்தால், கிராமத்திற்கு போக்குவரத்து வசதி முற்றிலும் துண்டிக்கப்படும்.


சமீபத்தில் பெய்த கனமழையால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், கிராமத்தைச் சேர்ந்த நான்கு நாட்களே ஆன குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதனால் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் போக்குவரத்து வசதி இல்லாததால் அந்த பகுதியில் உள்ள அணையில் இருந்து மதகுக்கு அடியில் இருந்த சுவரில் குழந்தையை ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் சுமந்து கொண்டு செல்ல, மற்றொருவர் தாயை தோளில் சுமந்து கொண்டு ஆபத்தான முறையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

போக்குவரத்து வசதி செய்து தர அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்பது கிராம மக்களின் பல வருட கோரிக்கையாக உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

From around the web