வயலில் ஒற்றை யானை அட்டகாசம்.. பயிர்கள் நாசம் அடைந்ததால் விவசாயிகள் வேதனை!

 
யானை

கொடைக்கானல் அருகே ஒற்றை யானை முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பேத்துப்பாறை, பாரதி அண்ணாநகர், பள்ளங்கி கோம்பை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு ஆகிய மலையோர கிராமங்களில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் விவசாய வயல்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

யானை

கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளங்கி கோம்பை கிராமத்தில் கடந்த 2 நாட்களாக ஒற்றை யானை முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும், அப்பகுதியில் ஒற்றை யானை முகாமிட்டுள்ளதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

காட்டு யானை

தகவலறிந்து வந்த வனத்துறையினர் சத்தம் எழுப்பி ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அப்பகுதியில் ஒற்றை யானை முகாமிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web