நள்ளிரவில் அதிர்ச்சி... நடைபாதையில் தூங்கியவர்கள் மீது ஏறிய லாரி... 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு!

 
லாரி

இன்று டிசம்பர் 23ம் தேதி அதிகாலை புனேவில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது தாறுமாறாக ஓடிய லாரி ஏறியதில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்தனர். 

இது குறித்து போலீசார் கூறுகையில், 'புனேவின் கேஷ்னந்த் பாதா பகுதியில் நடைபாதையில் தொழிலாளர்கள் சிலர் படுத்து தூங்கியுள்ளனர். அப்போது நள்ளிரவு 12.30 மணிக்கு தாறுமாறாக ஓடிய லாரி ஒன்று நடைபாதையில் ஏறியுள்ளது. இதில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்துள்ளனர்.

மும்பை

லாரி ஓட்டுநரை கைது செய்துள்ளோம். அவர் மதுபோதையில் இருந்தாரா என்பது குறித்து பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம். உயிரிழந்தவர்கள் வைபவி பவார் ( 1வயது), வைபவ் பவார் ( 2), விஷால் பவார் (22) என அடையாளம் தெரிய வந்துள்ளது. காயமடைந்துள்ள 6 பேரும் சசூன் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்' என்று கூறினர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web