அடுத்தடுத்து நடக்கும் மர்ம மரணம்.. விடுதியின் 8வது மாடியில் இருந்து தவறி விழுந்து மாணவி பலி!

சிக்கிமின் பாக்யாங் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு பி.டெக் மாணவி ஒருவர் விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில், விடுதியின் 8வது மாடியில் இருந்து தவறி விழுந்து அவர் உயிரிழந்ததாக நேற்று போலீசார் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் இறந்ததற்கான சூழ்நிலைகள் தெளிவாக இல்லை.
உண்மையை உறுதிப்படுத்த விசாரணை நடந்து வருகிறது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி விடுதி கட்டிடத்தில் இருந்து விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். மே 2024 இல், அதே விடுதியின் 7வது மாடியில் இருந்து விழுந்து மாணவி இறந்தார். இந்த நிலையில், ஒரு வருடத்திற்குள் மற்றொரு மாணவி உயிரிழந்தது கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!