மத்திய கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு ... வானிலை ஆய்வு மையம் தகவல்!

 
 நாளை வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது.!
 

 

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், “மத்தியகிழக்கு அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை ஆழ்ந்த தாழ்வாக வலுகுறைந்து, அதே பகுதிகளில் நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு திசையில் நகர்ந்து, தெற்கு குடீராத் மற்றும் வடக்கு மஹாராஷ்ட்ரா கடலோரப்பகுதிகளை நோக்கி மேலும் வலுகுறைந்து செல்லக்கூடும்,” என குறிப்பிடப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி

மேலும், தெற்கு மியான்மார் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால், அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய கிழக்கு வங்கக்கடலில் புதிய தாழ்வு உருவாகக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதன் தாக்கமாக, இன்று முதல் நவம்பர் 7 வரை தமிழகத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில், சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

காற்றழுத்த தாழ்வு பகுதி

மீனவர்கள் மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!