இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... பத்திரம் மக்களே.. பாதுகாப்பா இருங்க!

 
காற்றழுத்த தாழ்வு பகுதி

இன்று நவம்பர் 2ம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “தெற்கு மியான்மர் கடலோரம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி

இதன் தாக்கத்தால், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 7ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இதேபோன்ற மழை நிலை உருவாகும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில்  வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம்... கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை!  

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில், சில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் கடல் அலைச்சல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், மீனவர்கள் அங்கு வரும் 5ம் தேதி வரை கடல் பயணத்திற்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகும் இத்தாழ்வு பகுதி தீவிரமடைந்து புயலாக மாறுமா என்பதற்கான தகவல் குறித்து வானிலை மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?