தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து.. ஒருவர் உடல் நசுங்கி உயிரிழப்பு.. ஐந்து பேர் படுகாயம்!

 
விருத்தாசலம் விபத்து

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த, சார்லஸ் என்பவரின் குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர், ஒரே காரில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்துள்ள கோனாங்குப்பம்  கிராமத்தில் உள்ள, பெரியநாயகி அன்னை ஆலயத்தின்,  ஆண்டு திருவிழாவை கலந்து கொண்டு,  மீண்டும் தனது சொந்த ஊரான, நாகப்பட்டினத்திற்கு செல்ல, கார் மூலமாக திரும்பி கொண்டிருந்தனர்.

 அதேசமயம், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பனை தரிசித்து விட்டு, தனியார் பேருந்து மூலமாக, வந்து கொண்டிருந்தனர். அப்போது விருத்தாச்சலம் நகரத்துக்குட்பட்ட, வயலூர் ரயில்வே மேம்பாலத்தில் மேலே வந்து கொண்டிருந்தபோது,  திடீரென காரும் தனியார் பேருந்தும், மேம்பாலத்தின் மேலேயே, நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

இதனால் காரில் இருந்தவர்கள்  அலறல் சத்தம் கேட்டு,  அவ்வழியாக சென்றவர்கள், கார் மற்றும் பேருந்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில்  சார்லஸ் மனைவி ரோஸ்லின் (வயது 60) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.  இது பற்றி தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி,  பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

மேலும் காரில் இருந்த சார்லஸ், ஐரின், பிரின்சி, ரியானா, மற்றும் ஷேக் மரிது ஆகிய ஐந்து பேர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தால்  சிறிது நேரம் ரயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web