பைக், ஆட்டோ மீது மோதி தனியார் தொலைக்காட்சி ஊழியர் பலி!
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி தெருவில் வசித்து பகுதியில் வசித்து வருபவர் புவனேஸ்வர். இவர், சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொலைக்காட்சியில் பிசிஆர் பிரிவில் இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை பணிக்காக அதிகாலை வேலைக்கு வந்து கொண்டிருந்தபோது அசோக் நகர் காவல் நிலையம் அருகே எதிரே தவறான பாதையில் வந்த ஆட்டோ ஒன்று எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் சம்பவ இடத்திலேயே புவனேஸ்வர் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இவரது உடலை மீட்டு போலீசார் அரசு ராயப்பேட்டை பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் கால் முறிவு ஏற்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!