அதிர்ச்சி... மனிதரை பெல்ட்டில் போட்டு கொலை செய்த ரோபோ...!!

 
ரோபோ

தொழில் நுப்ட வளர்ச்சியால் நாளுக்கு நாள் பணிகள் குறைந்து சொகுசு வாழ்க்கைக்கு நம்மை பழக்கப்படுத்திக் கொண்டு வருகிறோம். ஆனால் அதனால் சில ஆபத்துக்களும் அவ்வப்போது விளைவதுண்டு. அதிலும் ஏஐ தொழில்நுட்பம் , ரோபா இவைகளால் ஆபத்துக்கள் நிறைந்தவை என்கின்றன விஞ்ஞான உலகமே.  மனிதர் - ரோபோ இடையிலான மோதல் குறித்தான கவலைகளும், புரளிகளும் அதிகரித்தே  வருகின்றன. அவ்வப்போது அதனை உண்மையாக்கும் வகையிலான செய்திகளும் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

ரோபோ

அதன்படி   தென்கொரியாவில்  தெற்கு கியோங்சாங்கில் உள்ள யோன்ஹாப்பில்  வேளாண் உற்பத்தி பொருட்களை விநியோகத்துக்கு தயார் செய்யும் தொழிற்சாலை    செயல்பட்டு வருகிறது. அதிகளவில் ரோபோக்களை கொண்டு செயல்படும் இந்த தொழிற்சாலையில், அந்த ரோபாக்களை கண்காணிக்கும் பணியில் மனிதர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வகையில், வேளாண் பொருட்கள் அடங்கிய பெட்டிகளை கன்வேயர் பெல்டில் கவிழ்க்கும் பணியில் ஒரு ரோபோ தீவிரமாக இருந்தது. அதன் சென்சார் செயல்பாடுகளை, அதே தொழிற்சாலையில் பணியாற்றும் 40 வயது மதிக்கத்தக்க நபர் கண்காணித்து வந்தார். அப்போது எதிர்பாராத ஒரு  சம்பவம் நிகழ்ந்தது.


 ரோபோ
அருகில் நின்றிருந்த மனிதரை, தனது நீண்ட இயந்திர கரத்தால் ரோபோ தூக்கி கன்வேயர் பெல்டில் போட்டது. அப்போது ரோபோட்டின் இயந்திர கரம் நசுக்கியதில், அந்த நபர் முகம் மற்றும் மார்பில் படுகாயம் அடைந்தார்.  உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  விசாரணையில், ’பெட்டிகளில் ஒன்று’ என்ற தவறான கணிப்பில், மனிதரைத் தூக்கி பெல்டில் வீசி ரோபோ கொலை செய்தது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web