செம... தீப்பெட்டிக்குள் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பட்டு வஸ்திரம்... திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கை!
உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் வழங்கும் காணிக்கை கணக்கில் அடங்காதது. அந்த வகையில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள தீப்பெட்டிக்குள் அடங்கும் பட்டு வஸ்திரம் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் சிரிசில்லாவில் வசித்து வருபவர் விஜய், நெசவு தொழிலாளி. இவர் திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தர்.
ஏழுமலையானுக்கு தீப்பெட்டிக்குள் அடங்கும் அளவுக்கு பட்டு வஸ்திரம் தயாரிக்க திட்டமிட்டார். அதன்படி கடந்த 10 நாட்களாக அதனை முதல் தர பட்டுநூல் கொண்டு பட்டு வஸ்திரத்தை தீப்பெட்டிக்குள் அடங்கும் அளவுக்கு தயாரித்து முடித்தார்.இதனை தீப்பெட்டிக்குள் அடக்கி இன்று திருமலைக்கு கொண்டுவந்து தேவஸ்தான செயல் அலுவலரிடம் வழங்கினார்.
இது குறித்து விஜய் `இதற்கு முன்பும் எனது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு தீப்பெட்டியில் அடங்கும் அளவுக்கு பட்டு சேலையை நெய்து வெமுலவாடாவில் உள்ள ராஜராஜேஸ்வரியம்மன் கோயில் மற்றும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கொடுத்துள்ளார். அதேபோன்று தற்போது நானும் பட்டு சேலை தயாரித்து வழங்கியுள்ளேன். சுவாமியின் பட்டாடைக்காக 200 கிராம் தங்கம் மற்றும் வெள்ளி என 48 அடி அங்குலத்தில் ரூ20 லட்சம் மதிப்பில் இந்த பட்டாடையை தயாரித்தேன்’ எனக் கூறியுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!