எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டிக்குள் சீறிய பாம்பு... அலறி அடித்து ஓட்டம் பிடித்த பயணிகள்!
இந்தியாவில் மும்பை மற்றும் ஜபல்பூர் இடையே இயக்கப்பட்டு வரும் கரீப் ரதம் ரயில் பெட்டியில் பாம்பு ஒன்று புகுந்துவிட்டது. ரயிலின் ஏசி பெட்டிக்குள் பாம்பு ஒன்று புகுந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 12187 என்ற எண்ணுடைய ரயிலின் ஜி17 ஏசி பெட்டிக்குள் பாம்பு நுழைந்து சுற்றித் திரிந்தது.
பயணிகள் இதைக் கண்டு அலறியடித்து ஓடினர். ரயில்வே அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரயில்வே பாதுகாப்பு குழுவும், போலீஸாரும் பயணிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
ஜி17 ஏசி பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக மற்ற பெட்டிகளுக்கு மாற்றப்பட்டனர். அந்தப் பெட்டி மூடப்பட்டு தனியாக நிறுத்தப்பட்டது. பாம்பு பிடிபட்டதா அல்லது வெளியேறியதா என்பது குறித்த தகவல்கள் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!