7 மாடி அலுவலகத்தில் திடீர் தீவிபத்து... 15 பெண்கள் உட்பட 22 பேர் உயிரிழப்பு!

 
jakartha

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள 7 மாடி அலுவலகக் கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் 15 பெண்கள், 7 ஆண்கள்  என்பது குறிப்பிடத்தக்கது.

கெமாயோரன் பகுதியில் அமைந்துள்ள அலுவலகக் கட்டடத்தின் முதல் தளத்தில் இன்று (டிச.9) நண்பகல் தீ பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மற்ற தளங்களுக்கும் வேகமாக பரவியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், 29 வாகனங்களுடன் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

Indonesia fire: Massive blaze engulfs seven-story office building in Jakarta; 20 killed

விபத்து நடந்த கட்டடம் டிரோன் தயாரிக்கும் நிறுவனத்தின் அலுவலகம் என தெரியவந்துள்ளது. சோதனைப் பகுதியில் இருந்த பேட்டரிகள் வெடித்து தீ ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகம் எழுந்துள்ளது. பலியானவர்களின் உடல்கள் கிழக்கு ஜகார்த்தா மருத்துவமனையில் அடையாளம் காண வைக்கப்பட்டுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!