ஜவுளிக் கடையில் திடீர் தீ விபத்து... 3 லட்சம் பணம் , துணிகள் , கம்ப்யூட்டர் எரிந்து நாசம்!

 
அரியலூர்

அரியலூர் நகரின் தேரடி பகுதியிலுள்ள ஜவுளிக் கடை உரிமையாளர் சண்முகம், தீபாவளி விற்பனையை முடித்து 20 அக்டோபர் இரவு 7 மணிக்கு கடையை மூடி வீட்டிற்கு சென்றார். அதே இரவு 11 மணியளவில் ரோந்து சென்ற போலீசார் கடையில் புகை எழுந்ததை கண்டறிந்தனர். அருகில் சென்று பார்த்ததில், கடை தீயில் முற்றிலும் எரிந்து நாசமானது

தீ விபத்து தீயணைப்பு

அரியலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில் குமார் தலைமையிலான வீரர்கள் உடனடியாக தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அடுத்தடுத்த கடைகள் பாதிக்கப்படாமல் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இரண்டு தளங்கள் கொண்ட கட்டிடத்தின் தரை தளத்தில் உள்ள துணிகள் முற்றிலும் எரிந்து போனதால், தனியார் மற்றும் அரசு தீயணைப்பு வாகனங்கள், JCB சாதனம் பயன்படுத்தி தீயை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கட்டுப்படுத்தினர்.

தீ தீயணைப்பு வெடிவிபத்து பட்டாசு

தீ விபத்தில் ரூ.3 லட்சம் பணம், புதிய துணிகள், கம்ப்யூட்டர் சாதனங்கள், மின்சார சாதனங்கள் மற்றும் பர்னிச்சர்கள் பல லட்சம் மதிப்பில் எரிந்து நஷ்டம் ஏற்பட்டது. அரியலூர் காவல்துறை சம்பவத்தை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. பண்டிகை காலத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து, நகரில் வியாபாரிகளுக்கு பெரும் சோகம் மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!