திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளம்.. நொடிப்பொழுதில் கவிழ்ந்த டேங்கர் லாரி.. பகீர் வீடியோ வைரல்!

 
புனே லாரி

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சமாதான் சவுக்  மாநகராட்சிக்கு சொந்தமான தண்ணீர் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, ​​திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது. இதில் டேங்கர் லாரியின் பின்புறம் கவிழ்ந்து சாலையில் உள்ள பள்ளத்தில் விழுந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


உடனடியாக டேங்கர் லாரியில் இருந்து டிரைவர் இறங்கியதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் பள்ளத்தில் சிக்கிய டேங்கர் லாரியை மீட்டனர். புனே மாநகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று திடீர் பள்ளத்திற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.

சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியதையடுத்து, பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web