பயங்கரமான துப்பாக்கிச் சண்டை.. 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை.. பாதுகாப்புப் படையினர் அதிரடி!
இந்தியாவில் நக்சலைட் ஆதிக்கம் அதிகம் உள்ள மாநிலங்களில் ஒன்று சத்தீஸ்கர். இந்நிலையில், நக்சலைட்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். நக்சலைட்டுகளுக்கு எதிரான இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, பாதுகாப்பு படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே அவ்வப்போது என்கவுன்ட்டர்கள் நடைபெறுகின்றன.
அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்த் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இந்த என்கவுன்டரில் மூன்று நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட 3 நக்சலைட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் மேலும் சில நக்சலைட்கள் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!