பெரும் சோகம்... பிரபல கிரிக்கெட் வீராங்கனையின் அத்தை புலி தாக்கி பலி!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை மின்னு மணியின் நெருங்கிய உறவினர் ராதா. இவர் காபி தோட்டத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். வயநாடு, கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் மனந்தவாடி பகுதியருகே பஞ்சரகொல்லியில் காபி தோட்டம் உள்ளது.
இதில் ராதா பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் அவருடைய உடல் தோட்டத்தில் கிடந்துள்ளது. அவரை புலி ஒன்று தாக்கி கொன்றுள்ளது. உடலின் ஒரு பகுதியை புலி தின்றிருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வீராங்கனை மின்னு மணியின் நெருங்கிய உறவினர் ராதா. வயநாட்டை சேர்ந்தவரான மின்னு மணி, அவருடைய சமூக ஊடக பதிவில், புலியை விரைவில் பிடித்து, உள்ளூர் மக்களுக்கு அமைதி தர வேண்டும் என தெரிவித்து உள்ளார்.
இந்த சம்பவத்திற்கு வயநாடு தொகுதியின் எம்.பி.யான பிரியங்கா காந்தி இரங்கல் தெரிவித்து உள்ளார். நேற்று மாலையும் புலி அந்த வழியே சென்றது. இதனால், மக்களிடையே அச்சம் அதிகரித்து உள்ளது. புலியை கூண்டு வைத்து பிடிக்கும் பணியை தொடங்கியிருப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!