கோர விபத்து... பெரும் சோகம்... ஆட்டோ மீது கம்பிகள் சரிந்து 7 பேர் துடிதுடித்து உயிரிழப்பு!

 
ஆட்டோ விபத்து

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வராங்கல் மாவட்டத்தில் ஒரு லாரி  கம்பிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது.   இந்நிலையில் லாரி எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததால் அதிலிருந்த கம்பிகள் அருகே சென்ற ஆட்டோ மீது சரிந்து விழுந்தன.

ஆட்டோ விபத்து

இதனையடுத்து  கம்பிகள் குத்தியதால் ஆட்டோவில் சென்ற 7 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

லாரி ஓட்டுநர் போதையில் வாகனத்தை வேகமாக இயக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web