கணவரை காதலித்த மாற்றுத்திறனாளி பெண்.. மனைவி செய்த அதிர்ச்சி சம்பவம்!

 
சுரேஷ் - சந்தியா

தெலுங்கானா மாநிலம், மகபூபாபாத் மாவட்டம், சின்னகூடுரு மண்டலம், உக்கம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும், சரிதா என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த மாமன் மகள் சந்தியா, சுரேஷை காதலித்து வந்துள்ளார். சந்தியா மாற்றுத்திறனாளி பெண். இதுகுறித்து சந்தியா, சரிதாவிடம் கூறினார். இதையடுத்து, மனைவி சரிதா, கணவர் சுரேஷுக்கும், சந்தியாவுக்கும் கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணத்தை நடத்தி வைத்தார்.

மாற்றுத்திறனாளியான சந்தியா, கணவரை காதலிப்பதாக கூறியதால், மனிதாபிமானத்துடன் இருவரையும் திருமணம் செய்து கொண்டதாக, சரிதா கூறினார். குறிப்பாக, மாற்றுத்திறனாளியான சந்தியாவை நன்றாக பார்த்துக் கொள்வதற்காக, கணவரை திருமணம் செய்து, வீட்டிற்கு அழைத்து வந்தேன் என்றும் குறிப்பிட்டுள்ளார் .

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web