அதிர்ச்சி... புலி தாக்கி பெண் தொழிலாளி பலி...பிரியங்கா காந்தி இரங்கல்!

 
புலி


 
கேரள மாநிலத்தில்  வயநாட்டில்  புலி தாக்கியதில் காபி தோட்டத்தின் பெண் தொழிலாளி ஒருவர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வயநாட்டின் மனந்தாவடி பகுதியிலுள்ள தனியார் காபி தோட்டத்தில் பணிபுரிந்து வருபவர் 45 வயது ராதா .   பழங்குடியின பெண்ணான இவர் இன்று  காலை காபிக் கொட்டைகள் பறிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது, அங்கு பதுங்கியிருந்த புலி ஒன்று அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், அந்த பெண் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.


இந்த தாக்குதலில் பலியான ராதாவின் உடல் பாதி உண்ணப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது உடலை சுற்றியிலும் புலியின் கால்தடங்கள் பதிந்து இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த சம்பவத்தை அறிந்த  அப்பகுதி பொதுமக்கள் புலியைப் பிடித்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அதுவரையில் அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்ய  விடமாட்டோம் எனவும் கூறி  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரியங்கா காந்தி


இதனைத் தொடர்ந்து, அந்த புலியை உயிருடன் அல்லது சூட்டுப்பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக  அமைச்சர் கேலூ தெரிவித்துள்ளார். ராதாவின் குடும்பத்திற்கு ரூ.11 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் எனவும் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கேலூ உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.
முன்னதாக, புலி தாக்கியதில் பலியான ராதாவின் கணவர் அச்சப்பன் வனத்துறையில் கண்கானிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.  இந்நிலையில், ராதாவின் இறப்பு செய்தி அறிந்த வயநாடு மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி, தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.  

From around the web