மரவள்ளிக் கிழங்கைப் பயன்படுத்தி நாட்டு வெடிகுண்டு தயாரித்த இளைஞர்... குமரியில் பரபரப்பு!

 
மரவள்ளி வெடிகுண்டு

கன்னியாகுமரி மாவட்டம் தாடகை மலையில், மரவள்ளிக் கிழங்கைப் பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கான நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்து வந்தவர் ஒருவரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மற்றொருவர் தப்பி ஓடிய நிலையில், அவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட தாடகை மலையில் காட்டுப் பன்றிகள், மான், மிளா உள்ளிட்ட வனவிலங்குகளைச் சிலர் வேட்டையாடுவதாக வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வனத்துறை அதிகாரிகள் நேற்று (சனிக்கிழமை) மூக்குத்தி சராசம் காட்டுப் பகுதியில் ரோந்து சென்ற போது, இருவர் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கான நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தனர்.

எவர்சில்வர் வெடிகுண்டு

அதிகாரிகளைக் கண்டதும் கடுக்கரை அருகே உள்ள திடல் பகுதியைச் சேர்ந்த மரியதாஸ் (35) என்பவர், ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுடன் அருகில் உள்ள கால்வாயில் குதித்துத் தப்பி ஓடிவிட்டார். அதே பகுதியைச் சேர்ந்த மற்றொருவரான பொன்னம்பலம் (42) என்பவரை வனத்துறையினர் பிடித்துக் கைது செய்தனர். அவரிடமிருந்து வெடிபொருளும், குடைந்து எடுக்கப்பட்ட மரவள்ளிக் கிழங்கும், அவர்கள் பயன்படுத்திய ஸ்கூட்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட பொன்னம்பலம் வனச் சிறப்புக் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டார். தப்பி ஓடிய மரியதாஸை வனத்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கைது

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், "மரவள்ளிக் கிழங்கின் உள்ளே உள்ள சதைப்பற்றை வெளியே எடுத்து, அந்த இடத்தில் பட்டாசுக்கு பயன்படுத்தும் வெடிமருந்துக் கலவையை நிரப்புவார்கள். விலங்குகளுக்கு வெடிமருந்தின் வாசம் தெரியாது; மரவள்ளிக் கிழங்கின் வாசம் தான் தெரியும். எனவே விலங்குகள் அதை உண்ணும் போது வெடித்து, வாய் சிதறித் துடிதுடித்து இறந்து விடும். இந்த முறைப்படிதான் இருவரும் வனவிலங்குகளை வேட்டையாட முயன்றுள்ளனர்" என்று தெரிவித்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!