வைரலாகும் வீடியோ... கடாயை தலைக்கவசமாக அணிந்த இளைஞர்!

 
கடாய்
 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர், அதற்கு பதிலாக சமையல் பாத்திரமான கடாயை தலையில் அணிந்து சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

போக்குவரத்து காவல் துறை அபராதம் விதிக்குமோ என்ற பயத்தில், கடாயை தலைக்கவசம் போல் கவிழ்த்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் அமர்ந்த இளைஞரின் வீடியோவை பலர் பகிர்ந்து வருகின்றனர். கர்நாடக போக்குவரத்து காவல் துறை இந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, இது பெங்களூருவின் ரூபனா அக்ரஹாரா பகுதியில் பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.

அதோடு, “முட்டை ஆம்லெட் போடுவதற்குப் பயன்படுத்தப்படும் கடாய், விபத்திலிருந்து தலையைக் காப்பாற்றாது” என எச்சரிக்கை செய்தியையும் இணைத்துள்ளது. மேலும், பாதுகாப்பற்ற பொருட்களை தலைக்கவசம் மாற்றாக பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் இதை நகைச்சுவையாகக் கருதினாலும், சிலர் உயிர் பாதுகாப்பை அலட்சியம் செய்யக்கூடாது எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!