பரபரப்பான சாலையில் அரை குறை ஆடையுடன் சுற்றித் திரிந்த இளம்பெண்.. கொதித்தெழுந்த நெட்டிசன்கள்!

 
இந்தூர் பெண்

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள மெக்தூத் சாட்-சௌப்பட்டி மற்றும் 56 துகான் சாட்-சௌபட்டி ஆகிய பகுதிகளில் அரைகுறை ஆடையுடன் சுற்றித் திரிந்த பெண் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர்களில் பலர் அவரை உற்று பார்ப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மபி பாஜக அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


இந்தூர் போன்ற கலாச்சார நகரத்தில் இதுபோன்ற அநாகரிகம் நடக்கக்கூடாது. அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு அவர்கள் விரும்பியபடி வாழவும், சாப்பிடவும் சுதந்திரம் அளித்துள்ளது என்பது உண்மைதான். ஆனால், அத்தகைய சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துவதால் சமூகம் மோசமாகப் பாதிக்கப்பட்டால், அது அடிப்படை உரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்வதற்குச் சமம்,” என்றார். இதையடுத்து, பஜ்ரங் தளம் மற்றும் சில பெண்கள் அமைப்பினர் இளம்பெண் மீது புகார் அளித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதனால் பிரச்சனை மேலும் மோசமாகியது. இதையடுத்து நேற்று அந்த இளம்பெண் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இந்தியில் பேசிய அவர், தான் துபாயில் வசிக்கிறேன் என்றார்.  'பொது இடங்களில் இதுபோன்ற குட்டையான ஆடைகளை அணியக்கூடாது என்பதை உணர்ந்தேன். இனி இதை செய்ய மாட்டேன். என்னை மன்னியுங்கள். தயவு செய்து என்னை விட்டு விடுங்கள். இதனால் நான் தற்கொலை செய்து கொள்ள விரும்புகிறேன்,'' என்றார். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web