Connect with us

ஆன்மிகம்

அதிர்ஷ்டம் தரும் ஆடிவெள்ளி அம்பிகை வழிபாடு!

Published

on

கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி’ என்பது ஆன்றோர் வாக்கு .தேவர்களுக்கு இரவு பொழுது. ஆடி மாத வெள்ளிக்கிழைகளில் ஆலயங்களில் விளக்கு பூஜை நடத்தப்படும். வெள்ளிக்கிழமை அன்று அம்பிகை வழிபாடு செய்தால் வெற்றிகள் குவியும். வேதனைகள் அகலும். பொதுவாகவே வெள்ளிக்கிழமைகளில் ஆலய வழிபாட்டை மேற்கொண்டால் அற்புதப் பலன்கள் கைமேல் கிடைக்கும்.

ஆடி வெள்ளிக்கிழமை அதிகாலையில் வீட்டைச் சுத்தம் செய்து கோலமிட்டு மாவிலைத் தோரணம் கட்டி மகாலட்சுமியை வரவேற்க வேண்டும். வீட்டு வாசலில் தாமரை, இதயக்கமலம், ஐஸ்வர்யக் கோலம் இவற்றை இடலாம். ‘திருமகளே வருக’ என்றும் கோலமாவில் எழுதலாம். அதிகாலையில் கதவைத் திறக்கும் பொழுது அஷ்டலட்சுமிகளின் பெயரையும் உச்சரித்து கதவை திறக்க வேண்டும். இல்லத்து பூஜையறையில் மகாலட்சுமி படம் வைத்து, பஞ்சமுக விளக்கேற்றி நடுநாயகமாக விநாயகர் படம் வைத்து லட்சுமி கவசம், லட்சுமி துதிகள், அபிராமி அந்தாதி, லலிதா சகஸ்கர நாமம், சௌந்தர்ய லஹரி இவற்றை பாடுவது சிறப்பு.

அம்பிகைக்கு ‘சக்தி’ என்ற பெயருமுண்டு. எந்தக் காரியத்தை செய்தாலும் ‘சக்தி இருந்தால் செய்.. இல்லையேல் சிவனே என்றிரு’ என்பது ஆன்றோர்கள் வாக்கு. மனிதனின் செயல்பாடுகளுக்கு உடலில் உள்ள சக்தியும்,அருள் கொடுக்கும் சக்தியான அம்பிகையும் தான். அந்த சக்தியை தான், ‘காமாட்சி’ , ‘மீனாட்சி’ ‘விசாலாட்சி’, ‘உண்ணாமலை’ ,‘அகிலாண்டேஸ்வரி’ ‘புவனேஸ்வரி’ , ‘திரிபுரசுந்திரி, காந்திமதி, பெரியநாயகி, தையல்நாயகி’ என பல்வேறு வகையான பெயர்களால் வழிபாடு செய்து வருகிறோம்.

இத்தனை சிறப்புகளைக் கொண்ட அம்பிகையை முறையாக விரதமிருந்து வழிபட்டு வர ஏற்ற தினமாக அமைவது ஆடி வெள்ளிக்கிழமைகளே. கல்வி, குழந்தைப் பேறு, குடும்பப் பிரச்சினை, திருமண யோகம் , வாழ்வில் செல்வம், மன அமைதி என அனைத்து நன்மைகளும் அடுக்கடுக்காக வந்து சேர ஆடி மாதத்து வெள்ளிக்கிழமைகளில் அம்பிகையை வழிபாடு செய்வோம். அவள் அருளால் கோடி இன்பம் பெறுவோம்.

இந்தியா7 mins ago

இதுக்கெல்லாம் தடை சொல்ல முடியாது! உச்ச நீதிமன்றம் அதிரடி!

சிவகங்கை14 mins ago

BREAKING: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஆன்மிகம்29 mins ago

இந்த 5 ராசிகளுக்கு இன்று அதிர்ஷ்ட மழை தான்!

செய்திகள்29 mins ago

இன்று (ஜூலை 28) பெட்ரோல், டீசல் விலை

குற்றம்43 mins ago

கவர்மெண்ட் வேலை கிடைக்கும்! 18 பேரிடம் ரூ10,00,000/ ஏமாற்றி மோசடி!

செய்திகள்51 mins ago

டோக்கியோ ஒலிம்பிக்: இன்று (ஜூலை 28) இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள்

இந்தியா1 hour ago

ஆகஸ்ட் 1 முதல் பள்ளிகள் திறப்பு! 6ம் வகுப்பு முதல் அனுமதி!

இந்தியா2 hours ago

குழந்தைகளைக் கடத்தி கொலை செய்தவருக்கு சாகும் வரை 4 ஆயுள் தண்டனை!

இந்தியா2 hours ago

நாட்டிலேயே முதன்முறையாக இன்று முதல் தமிழகத்தில் அதிரடி! கலக்கும் ஸ்டாலின்!

அரசியல்2 hours ago

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகை

அரசியல்2 months ago

இன்று விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.2,000 /-!!

அரசியல்4 months ago

அதிர்ச்சி! சகாயம் ஐ.ஏ.எஸ். தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றம்!

அரசியல்3 months ago

2 நாட்கள் முழு ஊரடங்கு! மாநில அரசு அதிரடி!

அரசியல்3 months ago

இந்தியாவில் 6 முதல் 8 வாரங்கள் ஊரடங்கு!

அரசியல்2 months ago

எச்சரிக்கை.! தவறு செய்யும் அரசு அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்!

அரசியல்2 months ago

நாளை முதல் தமிழகத்தில் இ-பதிவு !எப்படி விண்ணப்பிப்பது! ?

அரசியல்4 months ago

சினிமா பிரபலங்களின் வாக்கு பதிவு புகைப்படங்கள்

அரசியல்3 months ago

தமிழகத்தில் இரவு ஊரடங்கா? தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை!

செய்திகள்4 months ago

தமிழ் புத்தாண்டுக்கு இந்தியா முழுவதும் பொது விடுமுறை!

செய்திகள்2 months ago

தளர்வுகளில் பஸ், ரயில்கள் இயக்கப்படுமா?அதிகாரிகள் விளக்கம்!

Trending