ஆடி மாசத்துல மாங்கல்யத்தில் இருக்கும் இந்த பொருளைக் கொண்டு அர்ச்சனை செய்தால் வாழ்வில் ஏற்றம் தான்!

 
ஆடி மாசத்துல மாங்கல்யத்தில் இருக்கும் இந்த பொருளைக் கொண்டு அர்ச்சனை செய்தால் வாழ்வில் ஏற்றம் தான்!

ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் தான். அதிலும் ஆடி வெள்ளி என்பது அம்பாளுக்கு வழிபாடு செய்யக்கூடிய முக்கிய தினமாக கருதப்பட்டு வருகிறது இந்நாளில் அம்மன் கோவில்களில் விசேஷமான பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆடி மாதங்களில், அதிலும் குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமைகளில், நாம் நம்முடைய வீட்டிலும், திருமாங்கல்யத்திற்கு வைக்கும் இந்த பொருளை கொண்டு மனமுருகி அம்பாளுக்கு அர்ச்சனை செய்தால், கிடைக்கும் எண்ணற்ற பலன்களைப் பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

திருமாங்கல்யத்திற்கு பொதுவாக ஆலயங்களுக்கு செல்லும் பெண்கள், அங்கே தருகிற குங்குமத்தை வைப்பார்கள். அப்படி இந்த ஆடி மாதத்தில் வருகிற வெள்ளிக் கிழமைகளில் அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வந்தால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.

ஆடி மாசத்துல மாங்கல்யத்தில் இருக்கும் இந்த பொருளைக் கொண்டு அர்ச்சனை செய்தால் வாழ்வில் ஏற்றம் தான்!

பொதுவாக, கணவரின் தீர்க்காயுள் நிலைக்க, மனைவி தன்னுடைய திருமாங்கல்யத்திற்கு தினமும் குங்குமம் வைத்து வருவார். இப்போது இதை தினமும் எல்லாம் யாரும் பெரும்பாலும் கடைபிடிப்பது கிடையாது. இதனால் கணவனின் அன்பு மனைவிக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

குங்குமம், கர்ப்பப்பை தோஷங்களை நீக்க வல்லது. அனைத்து அம்மன் கோவில்களிலும் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் பவுர்ணமி ஆகிய இந்த மூன்று தினங்களில் விசேஷமாக குங்கும அர்ச்சனை செய்து வழிபடுவது வழக்கம். அதே போல நம் வீட்டிலும் இந்த நாட்களில் அம்மனை குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் எண்ணற்ற நன்மைகளை பெறலாம். அதிலும் ஆடி வெள்ளிக் கிழமைகளில் இதை செய்து வர இன்னும் விசேஷமான பலன்கள் கிடைக்கும்.

ஆடி மாசத்துல மாங்கல்யத்தில் இருக்கும் இந்த பொருளைக் கொண்டு அர்ச்சனை செய்தால் வாழ்வில் ஏற்றம் தான்!

கருத்தரிப்பதில் பிரச்சனைகள் இருப்பவர்கள் அல்லது கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட நோய்கள் இருப்பவர்கள் மாதவிடாய் கோளாறுகள், வயிற்று வலி என்று கருப்பை சார்ந்த அத்தனை பிரச்சனைகளும் தீர ஆடி வெள்ளிக் கிழமைகளில் அம்பாளுக்கு குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்யலாம்.

அடிக்கடி குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருப்பவர்கள் இந்நாட்களில் அம்பாள் கோவிலுக்கு சென்று குங்கும அர்ச்சனையில் கலந்து கொள்ளலாம்.

From around the web