ஆம் ஆத்மி அமைச்சர் திடீர் ராஜினாமா... தலைநகரில் பரபரப்பு!
தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தவரும் அமைச்சருமான கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம் ஆத்மி கட்சி பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். கைலாஷ் கெலாட், டெல்லி மாநில போக்குவரத்துத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்து வந்தார். அவர் டெல்லி மாநில முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எழுதிய கடிதத்தில், டெல்லி எம்எல்ஏவாகவும், மாநில அமைச்சராகவும் மக்கள் பணி ஆற்ற எனக்கு பொறுப்புகள் வழங்கியதற்கு நன்றி.
— Kailash Gahlot (@kgahlot) November 17, 2024
நமது கட்சி தற்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. நமது அரசியல் செயல்பாடுகளால் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செய்ய முடியாமல் இருக்கிறது.குறிப்பாக யமுனை ஆற்றை சுத்தம் செய்து தருவோம் என மக்களுக்கு கூறினோம். ஆனால், அதனை செய்ய முடியவில்லை. நம் மக்களுக்காக போராட வேண்டும். தற்போது வரை அரசியல் சூழலுக்காக மத்திய அரசுடன் சண்டையிட்டு கொண்டிருக்கிறோம். சாமானிய மக்களுக்கான கட்சியாக இருக்கிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு எழ தொடங்கிவிட்டது. இதனால் டெல்லியின் முன்னேற்றம் தடைபட்டுள்ளது.
டெல்லி அரசாங்கம் மத்திய அரசுடன் தொடர்ந்து சண்டையிட்டு கொண்டே இருந்தால் தலைநகர் டெல்லி முன்னேறாது என்பது தெளிவாகத் தெரிகிறது. இதனால் கட்சியில் இருந்து விலகுவதை தவிர எனக்கு வேறு வழி இல்லை.” என கடிதம் எழுதியுள்ளார். இதனை தொடர்ந்து தனது அமைச்சர் பதவி , ஆம் ஆத்மி கட்சி அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் தன்னை விலக்கி கொண்டார் கைலாஷ் கெலாட்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!