உஷார்!!! ஏ.சி அறை இப்படி இருந்தா புற்றுநோய், இதய நோய் ஏற்படும் அபாயம்!

 
உஷார்!!!  ஏ.சி அறை இப்படி இருந்தா புற்றுநோய், இதய நோய் ஏற்படும் அபாயம்!

இன்று பெரும்பாலும் ஏசி அறைகள் இல்லாத வீடுகளே இல்லை. விடிய, விடிய அறையின் அனைத்து ஜன்னல்கள் மற்றும் கதவுகளை இறுக்கமாக மூடி வைத்து விட்டு தூங்குகிறோம். இயற்கை காற்றுக்கு வீட்டுக்குள் வழி விடுவதே இல்லை.
இந்நிலையில் ஏசி குறித்த ஆய்வுகள் அமீரகத்தின் யூகோவ் அமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அது குறித்த முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி அறைகளுக்குள் ஏ.சி எந்திரங்களை சரியாக தூய்மை செய்யாவிட்டால் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம். சுத்தம் செய்யப்படாத ஏ.சி எந்திரங்களால் புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உஷார்!!!  ஏ.சி அறை இப்படி இருந்தா புற்றுநோய், இதய நோய் ஏற்படும் அபாயம்!

மோசமாக பராமரிக்கப்படும் ஏ.சி எந்திரங்களால் தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் நிமோனியா போன்ற நோய்களும் ஏற்படும் அபாயம் உள்ளது. வெளியில் உள்ள பாக்டீரியா, வைரஸ் கிருமிகளை விட ஏ.சி. எந்திரத்தில் அதிக அளவில் சேரும் கிருமிகள் எண்ணிக்கை அதிகம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வெளியில் உள்ள காற்றை விட ஏசி அறையின் உள்ளே உள்ள காற்றானது 5 மடங்கு அதிகமாக மாசுபடுகிறது.அலுவலகம், வீடுகளில் உள்ள ஏ.சி. எந்திரங்கள் சரியாக பராமரிக்கப் படாவிட்டால் அதில் கார்பன் மோனாக்சைடு, கார்பன்-டை-ஆக்சைடு, சிகரெட் புகை, பாக்டீரியா, சுத்தப்படுத்தும் திரவங்களின் படிமங்கள், பிரிண்டர் எந்திரத்தில் இருந்து வெளியாகும் ரசாயனம், பூச்சிக்கொல்லிகள் மற்றும் வாகன புகைகளின் எஞ்சிய துகள்கள் படிந்திருக்கும்.

உஷார்!!!  ஏ.சி அறை இப்படி இருந்தா புற்றுநோய், இதய நோய் ஏற்படும் அபாயம்!

பொதுமக்களிடையே எடுக்கப்பட்ட ஆய்வுகளில் 13 சதவீதம் பேர் மட்டுமே விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருகின்றனர். எனவே ஏ.சி. எந்திரங்களை அவ்வப்போது சுத்தம் செய்வோம். தரமான காற்றை சுவாசிப்போம். ஆரோக்கியத்தை பேணுவோம்.

From around the web