சபரிமலைக்கு சென்று திரும்பிய போது கோர விபத்து.. இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம்!
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று விட்டு பக்தர்கள் சென்ற கார், மினி லாரி மீது மோதிய விபத்தில் ஐயப்ப பக்தர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே திண்டுக்கல் சாலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த தெலங்கானா மாநில கார், தேனி நோக்கிச் சென்ற மினி லாரி மீது நேருக்கு நேர் மோதியது.
இதில், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் பலத்த காயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இருவர் சுயநினைவின்றி இருப்பதாக தேவதானப்பட்டி காவல்துறையினர் தெரிவித்தனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!