வைரல் வீடியோ... ஃபெங்கால் புயலால் குவியும் மேகக்கூட்டங்கள்.!
தமிழகத்தில் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் 12 கிமீ வேகத்தில் நகர்ந்து கொண்டுள்ளது. இந்த புயல் இன்று பிற்பகல் அல்லது மாலையில் கரையை கடக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பெஞ்சல் புயலானது மாமல்லபுரம் – காரைக்கால் கடற்கரைக்கு இடையே கரையை கடக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
சென்னை ரேடாரில் ‘ஃபெயின்ஜல்’ புயல் மேக கூட்டங்களின் தற்போதைய 3D படம் pic.twitter.com/U14evcK7eU
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 30, 2024
இந்த புயல் காரணமாக சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் சமயத்தில் 70 கிமீ முதல் 80 கிமீ வரையில் காற்று வீசக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
பெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றுவட்டார மாவட்டங்களின் மேல் குவிந்துள்ள மேகக் கூட்டங்களை ரேடார் உதவியுடன் 3டி புகைப்படமாக எடுத்து அதனை சென்னை வானிலை ஆய்வு மையம் வீடியோ சமூக வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!