காதல் நிராகரிப்பு ... கல்லூரி மாணவி மீது ஆசிட் வீச்சு ... !

 
நிராகரிப்பு

டெல்லி பல்கலைக்கழகத்தின் லட்சுமிபாய் கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் 20 வயது மாணவி ஒருவர், வடமேற்கு டெல்லியின் அசோக் விஹார் பகுதியில் ஆசிட் தாக்குதலுக்கு இலக்கானார். முகுந்த்பூரை சேர்ந்த அந்த மாணவி, சிறப்பு வகுப்புக்காக கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று வாலிபர்கள் சாலையில் அவரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆம்புலன்ஸ்

அவர் விலகிச் செல்ல முயன்றபோது, ஒருவன் மற்றொருவரிடம் இருந்து ஆசிட் பாட்டிலை பெற்று மாணவியின் மீது வீசினார். உடனே மாணவி தன்னைக் காக்க கைகளால் முகத்தை மறைத்ததால், முகத்தில் ஆசிட் படாமல் தப்பினார். ஆனால் கைகள் தீவிரமாக வெந்து கருகியதால் அவர் வலியில் அலறியபடி சரிந்தார். அருகிலிருந்தவர்கள் உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

டெல்லி போலீஸ்

போலீசார் விசாரணையில், அதே கல்லூரியில் படிக்கும் ஜிதேந்தர் என்பவன் காதலை நிராகரித்த மாணவியிடம் பழிவாங்க ஆசிட் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. ஜிதேந்தர் மற்றும் அவரது நண்பர்கள் அர்மான், இஷான் ஆகியோர் சம்பவத்திற்குப் பிறகு தப்பியுள்ளனர். இதில் மூவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து இந்திய தேசிய மாணவர்கள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!