சூப்பர்! குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அதிரடி திட்டம்!

 
சூப்பர்! குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அதிரடி திட்டம்!


தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்தும் மற்றும் தடுக்கும் வகையில் அனைத்து காவல்நிலையங்களிலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க குழந்தைகள் நல அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், கேளம்பாக்கம், தாழம்பூர், செங்கல்பட்டு நகரம் மற்றும் தாலுகா 7 போலீஸ் நிலையங்களில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றங்கள் தடுப்பது சம்பந்தமாக பகல் மற்றும் இரவு ரோந்து செல்லும் காவல்துறையினருக்கு இருசக்கர ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

சூப்பர்! குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அதிரடி திட்டம்!


இந்நிலையில் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் இருசக்கர மோட்டார் சைக்கிள் ரோந்து வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்து விஜயகுமார் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த இருசக்கர ரோந்து வாகனத்தில் 2 ரோந்து போலீஸ்காரர் 12 மணி நேர கழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். இதன்மூலம் குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதுடன், சாலை விபத்துகளை உடனடியாக சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவும் முடியும்.

சூப்பர்! குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அதிரடி திட்டம்!


இருசக்கர ரோந்து வாகனத்தில் அவசர ஒலிப்பான், நவீன வசதிகள் பொருத்தப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் குழந்தைகள் நல அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
போலீஸ் நிலையத்தில் கொடுக்கப்படும் புகார்கள் மற்றும் தொலைபேசி தகவல்களுக்கு உடனுக்குடன் சென்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தடுத்து சட்டரீதியான நடவடிக்கையை எடுக்க முடியும் எனவும் இந்த குழந்தைகள் நல அலுவலர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web