தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 8,997 சத்துணவு ஊழியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு!
தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு பணியாளர்கள் காலியிடங்களை மொத்தமாக நிரப்புவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி மொத்தம் உள்ள 8,997 சத்துணவு சமையல் உதவியாளர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவை அனைத்தும் மாதம் ரூ.3,000 என்ற தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்பட இருக்கும் நிலையில் இந்தப் பணியில் நியமனம் செய்யப்படுபவர்கள் 12 மாதங்கள் வரை பணிபுரிய அனுமதி வழங்கப்பட உள்ளது.
இவர்களில் திருப்திகரமாக வேலை பார்ப்பவர்கள் தகுதியானவர்களாக கருதப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள். மேலும் அவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியமாக மாதம் ரூ. 3000 முதல் ரூ.9000 வரை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!