நடிகர் சிரஞ்சீவி கின்னஸ் சாதனை... குவியும் வாழ்த்துக்கள்!
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி அதிக படங்களில் நடனமாடிய வகையில் கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார். நடிகர் சிரஞ்சீவி 1978ல் திரையுலகில் நடிகராக அறிமுகமான நிலையில், ஆரம்பம் முதலே தனது படங்களில் நடனத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்திருந்தார்.
கடந்த 45 ஆண்டு கால திரை வாழ்க்கையில் 156 படங்களில் நடித்துள்ள சிரஞ்சீவி இதுவரை 537 பாடல்களுக்கு நடனமாடி உள்ளார்.இதில் 24,000-க்கும் அதிகமான நடன அசைவுகள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவில் வேறு எந்த நடிகரும் இந்த மைல்கல்லை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதைக் கெளரவிக்கும் விதமாக அவரது பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற விழாவில் அதற்கான சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சான்றிதழ் வழங்கி கெளரவித்தார் நடிகர் ஆமிர்கான்
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!