வீட்டோட பூட்டை உடைச்சிட்டாங்க... நடிகர் கஞ்சா கருப்பு காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!

 
கஞ்சா கருப்பு

தமிழ் திரைஉலகில் தனக்கென தனி முத்திரை பதித்த காமெடி நடிகர்களில் ஒருவர் நடிகர் கஞ்சா கருப்பு. இவர்   சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்.  நடிகர் கஞ்சா கருப்பு சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர் பகுதியில் ரூ 20000க்கு   வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார். சென்னையில் சினிமா சூட்டிங் நடக்கும் போதெல்லாம் வந்து இந்த வாடகை வீட்டில் தங்குவார்.

கஞ்சா கருப்பு

இந்நிலையில் தான் வெளியூரில் இருந்த சமயம் பார்த்து, தனது வீட்டின் பூட்டை உரிமையாளர் ரமேஷ் உடைத்து வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட முயற்சி செய்திருப்பதாக  நடிகர் கஞ்சா கருப்பு மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

போலீஸ்


தொடர்ந்து தான் அதே வீட்டில் 5 ஆண்டுகளாக  குடியிருந்து வருவதாகவும், தன்னை கேட்காமல் வீட்டின் பூட்டை உரிமையாளர் உடைத்திருப்பதாகவும் நடிகர் கஞ்சா கருப்பு  குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் குறித்து  மதுரவாயல் காவல்துறையினர் இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web