அச்சச்சோ.... நடிகர் பிரபுவிற்கு மூளை அறுவை சிகிச்சை... பதற்றத்தில் ரசிகர்கள்!

 
பிரபு

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனான பிரபுவுக்கு இன்றும் தனிப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ரஜினி, கமலுக்கு என்றென்றும் நெருக்கமான தம்பியாக இருந்து வரும் பிரபுவின் கன்னக்குழி அழகிற்காகவே ரசிகர்கள் பலர் உள்ளனர். இந்நிலையில் நடிகர் பிரபுவுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், திடீரென மூளையில் அறுவை நடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

பிரபு

கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் தலைவலி காரணமாக மெட்வே ஹார்ட் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் பிரபுவுக்கு, தலையை ஸ்கேன் செய்து பார்த்த போது, நடுமூளையின் தமனி பகுதியில் உள்ள உள் கரோடிட் தமனியின் மேல் பகுதியில் வீக்கம் இருந்ததாகவும், அதனைத் தொடர்ந்து மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

பிரபு

தற்போது அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், நடிகர் பிரபு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் சில நாட்கள் பூரண ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web