நடிகர் பிரகாஷ் ராஜ் உட்பட 70 பேருக்கு ராஜ்யோத்சவா விருது... கர்நாடக அரசு அறிவிப்பு!

 
பிரகாஷ் ராஜ்

கர்நாடகம் உருவான நாளையொட்டி ஆண்டுதோறும் நவம்பர் 1ஆம் தேதி மாநிலம் முழுவதும் ராஜ்யோத்சவா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு பல துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு கர்நாடக அரசு ராஜ்யோத்சவா விருதுகளை வழங்கி கவுரவிக்கும் பாரம்பரியம் உள்ளது.

அதன்படி, இவ்வாண்டுக்கான ராஜ்யோத்சவா விருதுக்கு 70 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இலக்கியம், இசை, சமூகசேவை, விவசாயம், ஊடகம், திரைத்துறை, அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட பல பிரிவுகளில் சாதனை புரிந்தவர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.

நடிகர் சங்க தேர்தலில் பிரகாஷ்ராஜ்! தலைவர் பதவிக்கு களம் இறங்குகிறார்!

திரைத்துறையில் தட்சிண கன்னடாவை சேர்ந்த நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் குடகு மாவட்டத்தை சேர்ந்த நடிகை விஜயலட்சுமி சிங் ஆகியோர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இலக்கியத் துறையில் 6 பேரும், நாட்டுப்புறக் கலையில் 8 பேரும், இசைத் துறையில் 2 பேரும், சமூக சேவையில் 5 பேரும் விருது பெறுகின்றனர்.

மேலும், நிர்வாகத் துறையில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சித்தையா, மருத்துவத் துறையில் டாக்டர்கள் ஆலம்மா மாரண்ணா மற்றும் ஜெயரங்கநாத் ஆகியோரும் விருது பெறுவோர் பட்டியலில் உள்ளனர்.

மோடி பிரகாஷ்ராஜ்

வெளிநாடுகளில் வசிக்கும் கன்னடர்களில் 2 பேரும், சுற்றுச்சூழல் துறையில் 2 பேரும், ஊடகத் துறையில் 4 பேரும், யக்‌ஷகானா மற்றும் நாடகத் துறைகளில் தலா பலர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விருது பெறும் ஒவ்வொருவருக்கும் ரூ.5 லட்சம் பணப்பரிசும், 25 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?