நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி... இன்று காலை முக்கிய பரிசோதனை!
நடிகர் ரஜினிகாந்த் (74) நேற்று ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் வயிற்றுவலி மற்றூம் வயிற்றுப் பகுதியில் உள்ள வீக்கம் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்துக்கு இன்று காலை முக்கிய பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வயிற்று வலி மற்றூம் இதயம் தொடர்பான பிரச்சனை காரணமாக இதய சிகிச்சை நிபுணரிடம் அனுமதி கேட்கப்பட்டு, இன்று அதிகாலை 6 மணியளவில் அவருக்கு முக்கிய மருத்துவ பரிசோதனை நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவ சிகிச்சைகள் முடிந்த பின்னர் விரைவில் வீடு திரும்புவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை, ரஜினிகாந்த் உடல்நிலை தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் இருந்தும், அவரது குடும்பத்தினரிடம் இருந்தும் எந்தவொரு விளக்கமும் வரவில்லை. இன்று காலை ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து, மருத்துவமனை செய்திக்குறிப்பு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!