இரண்டாவது குழந்தையை வரவேற்கும் நடிகர் ராம் சரண் - உபாசனா ஜோடி... குவியும் வாழ்த்துகள்!
தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா, தங்களின் இரண்டாவது குழந்தை வருகைக்காக காத்திருக்கின்றனர் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உபாசனா தனது வளைகாப்பு நிகழ்ச்சி வீடியோவை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, இரண்டாவது குழந்தையின் வரவை உணர்ச்சிப் பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார். ரசிகர்களும் நெருங்கிய நண்பர்களும் வாழ்த்து மழையில் மிதக்கச் செய்து வருகின்றனர்.
சுமார் 12 ஆண்டுகள் முன்பு, 2012 ஜூன் மாதத்தில் திருமணம் செய்து கொண்ட ராம் சரண் – உபாசனா தம்பதிக்கு, 2023 ஜூன் மாதத்தில் பெண் குழந்தை பிறந்து குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவியது. இப்போது மீண்டும் குழந்தை வரவால் குடும்பத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி நிலவுகிறது.
‘ஆர்ஆர்ஆர்’, ‘மகதீரா’, ‘ரங்கஸ்தலம்’ உள்ளிட்ட பல பெரும் வெற்றி படங்களில் நடித்து தென்னிந்தியாவை தாண்டி சர்வதேச அளவிலும் பிரபலமானவர் ராம் சரண். தற்போது அவர் பல புதிய படங்களில் நடித்து வருகிறார்.
வர்த்தக உலகில் முன்னணியில் இருப்பவர் உபாசனா, பல்வேறு சமூகப் பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார். இந்த புதிய தகவல் தற்போது தெலுங்கு திரை உலகிலும் ரசிகர் வட்டாரங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
