நடிகர் சம்பத்ராம் கார் விபத்தில் காயம்... மருத்துவமனையில் அனுமதி... அப்பளமாய் நொறுங்கிய கார்!

 
சம்பத்ராம்
 

 

நடிகர் சம்பத்ராம், சென்னையில் கார் விபத்தில் காயமடைந்துள்ளார். பின்னால் இருந்து வந்த லாரி ஒன்று நடிகர் சம்பத் ராம் கார் மீது மோதியதில் கார் அப்பளமாய் நொறுங்கியது. 'தங்கலான்’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்த நடிகர் சம்பத்ராமின் கார் விபத்தில் சிக்கி இருக்கிறது. 

விபத்து கார்

‘முதல்வன்’, ‘வல்லரசு’, ‘தீனா’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகர் சம்பத்ராம். சமீபத்தில் வெளியான ‘தங்கலான்’ படத்திலும் அவர் நடித்திருந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். 

ஆம்புலன்ஸ்

நேற்று சென்னை, கிண்டி அருகே இவர் தனது காரில் சென்றுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இவரது கார் விபத்துக்குள்ளாகி இருக்கிறது.காரில் பின்னால் இருந்து வந்த லாரி, இவருடைய கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த நடிகர் சம்பத்ராம் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவருடைய கார் அப்பளம் போல நொறுங்கி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சம்பத்ராம் தற்போது சிகிச்சை முடித்து நலமுடன் இருக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web