நடிகர் விஷாலுக்கு படப்பிடிப்பில் விபத்து! வைரலாகும் வீடியோ!

 
நடிகர் விஷாலுக்கு படப்பிடிப்பில் விபத்து! வைரலாகும் வீடியோ!

புதுமுக இயக்குநர் சரவணனின் படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஷால். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

ராமோஜிராவ் ஸ்டூடியோவில் நேற்று விஷாலுக்கும், நடிகர் பாபு ராஜுக்கு இடையேயான சண்டைக் காட்சிகளை இயக்குநர் படமாக்கிக் கொண்டிருந்த போது எதிர்பாராத வகையில் ஏற்பட்ட விபத்தில் விஷால் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது.

முதுகில் அடிபட்டதும், படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்த விஷாலை மருத்துவமனையில் சேர்த்தனர்.

விஷாலுக்கு முறையான பிஸியோதெரபி சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

From around the web