நடிகர் விஷாலுக்கு உடல்நல பாதிப்பு... என்னாச்சு? பதறிய ரசிகர்கள்!!
ஏறக்குறைய 12 வருடங்களுக்குப் பிறகு ஒருவழியாக பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது விஷால் - சுந்தர்.சி கூட்டணியில் உருவான மதகஜராஜா’. இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னையில் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விஷாலின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. கையில் மைக்கை பிடித்துக் கூட அவரால் பேசவே முடியவில்லை. கை நடுங்கிக் கொண்டே இருந்தது.
விஷால் முழுமையாக பேசி முடித்தவுடன், நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி “விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல். படத்தின் விளம்பர நிகழ்வுக்கு கடும் காய்ச்சலுடனே வந்துள்ளார்” என்று தெரிவித்தார்.
விஷால் கை நடுக்கத்துடன் பேசும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் விஷால் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விஷால், வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம், சோனு சூட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மதகஜராஜா’. இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!