நடிகர்கள் அரசியலுக்கு வரலாம்... அரசியலில் நடிக்கக் கூடாது - சரத்குமார்

 
சரத்குமார்

இந்தியா ஒரு ஜனநாயக நாடு, யாரும் அரசியலுக்கு வரலாம். ஆனால் அரசியலில் ‘நடிப்பு’ அனுமதிக்கப்படக்கூடாது என நடிகரும் பா.ஜ.க. நிர்வாகியுமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடிகை நமீதா மற்றும் அவரது கணவர் வீரா இணைந்து புதிய நடிப்பு பயிற்சி பள்ளியை தொடங்கினர். அதன் துவக்க விழாவில் சரத்குமார் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

சரத்குமார் ராதிகா

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதால், நடிகர்களும் அரசியலுக்கு வரலாம். ஆனால் அரசியலில் சேர்ந்த பிறகு, அங்கு நடிப்பது தவறு. அரசியல் என்பது மக்கள் நம்பிக்கையுடன் காணும் தளம். அங்கு உண்மையுடன் செயல்பட வேண்டும்.

சரத்குமார் ராதிகா

அரசியலுக்கு வருபவர்களின் தகுதி, அவர்கள் பேசும் கருத்துக்கள், மக்கள் நலனுக்காக செய்ய நினைக்கும் பணிகள், அவற்றை நிறைவேற்றும் திறமை ஆகியவற்றை மக்கள் கவனிக்க வேண்டும். உண்மையான மனதுடன் பணியாற்றுவோர்கள் அரசியலுக்கு வந்தால் அதுவே மக்களுக்கு நன்மை பயக்கும்” என சரத்குமார் கூறினார். இந்நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?